F

படிப்போர்

Thursday 29 December 2016

296.நீதத் துவமாகி

296
மதுரை

                  தானத் தனதான

நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் கடலோனே 
கோதற் றமுதானே கூடற் பெருமாளே

பதம் பிரித்தல்

நீதம் துவம் ஆகி நேம துணையாகி 
பூத தயவான போதை தருவாயே
நாதத்து ஒளியோனே ஞான கடலோனே 
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே

பத உரை

நீதம் - நீதியில் துவம் ஆகி - நிலை பெற்றதாய் நேம - சீரிய ஒழுக்கத்தில் ஒழுக   துணையாகி - துணை செய்வதாய்
பூதத்தயவான - எல்லா உயிர்களையும் தன்னைப் போல் எண்ணும் போதைத் தருவாயே - பெரிய ஞானத்தை தருவாயாக நாதத் தொளியோனே - ஓசை ஒளியாய் விளங்குபவனே  ஞானக் கடலோனே - ஞானக் கடல் போன்றவனே கோது அற்ற - குற்றம் இல்லாத அமுதானே - அமுதம் போன்றவனே கூடல் பெருமாளே - மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

நீதித் தன்மை கொண்டதாய், நன்னெறியில் ஒழுகத் துணை செய்வதாய், எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதும் கருணை உள்ளதாய் விளங்கும் மூதறிவைத் தந்தருளுக ஓசை, ஒலியாய் விளங்குபவனே  மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே

விளக்கக் குறிப்புகள்

1 பூதத்தயவு
எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் 
தெய்வ அருள் கருணை செய்வாய் பராபரமே   -தாயுமானவர், பராபரக் கண்ணி 
2 நாதத் தொனியோனே 
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே 
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே                      - திருநாவுக்கரசர் தேவாரம்

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published