F

படிப்போர்

Tuesday 27 August 2013

251. இருவினை

251
திருபாண்டிக்கொடுமுடி
ஈரோடுலிருந்து 37 கிமீ தொலவில். கறையூர் என்று ஊரின் பெயர்,
பாண்டிக்கொடிமுடி என்பது கோயிலின் பெயர்
                   
தனதனத் தனனத்            தனதான

இருவினைப் பிறவிக்  கடல்மூழ்கி
       இடர்கள்பட் டலையப்                புகுதாதே
திருவருட் கருணைப்   ப்ரபையாலே
        திரமெனக் கதியைப்             பெறுவேனோ
அரியயற் கறிதற்    கரியோனே
       அடியவர்க் கெளி யற்                 புதநேயா
குருவெனச் சிவனுக்   கருள்போதா
      கொடுமுடிக் குமரப்                 பெருமாளே.

பதம் பிரித்தல்

இரு வினை பிறவி கடல் மூழ்கி
இடர்கள் பட்டு அலைய புகுதாதே

இரு வினை = நல் வினை, தீ வினை என்னும் பிறவிக் கடல் மூழ்கி = பிறவி என்கின்ற கடலில் மூழ்கி இடர்கள் பட்டு = வேதனைகளில் கட்டுண்டு அலையப் புகுதாதே = அலையுமாறு புகாமல்

திரு அருள் கருணை ப்ரபையாலே
திரம் என கதியை பெறுவேனோ

திரு அருள் = (உனது) திருவருளாகிய கருணைப் ப்ரபையாலே = கருணை ஒளியாலே திரம் என = நிலையானது என்று கதியைப் பெறுவேனோ= நல்ல கதியைப் பெறுவேனோ

அரி அயற்கு அறிதற்கு அரியோனே
அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா

அரி அயற்கு = திருமாலும், பிரமனும் அறிதற்கு அரியோனே = அறிந்து கொள்ளுவதற்கு அரியவனே அடிய வர்க்கு எளிய = அடியவர்களுக்கு எளியவனாகக் கிடைக்கும் அற்புதநேயா = அற்புத நண்பனே

குரு என சிவனுக்கு அருள் போதா
        கொடுமுடி குமர பெருமாளே.

குரு எனச் சிவனுக்கு = குரு மூர்த்தியாய் சிவபெருமானுக்கு அருள் போதா =  அருளிய ஞான ஆசாரியனே கொடுமுடிக் குமரப் பெருமாளே = கொடுமுடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும்பெருமாளே.

   சுருக்க உரை

இருவினைகளால் உண்டாகும் பிறவி என்னும் கடலில் மூழ்கி, துன்பங்களுக்கு ஆளாகாமல், உனது திருவருள் பெற்று நற் கதி அடைவேனோ. திருமாலும் பிரமனும் காண முடியாத உன் திருவடிகள் அடியவர்களாலும் எளியோர்களாலும் அறியப்படுவதன்றோ! சிவனுக்கு உபதேசித்த குரு நாதா, நன் நல்ல கதியைப் பெற அருள் செய்வாய்.
   
ஒப்புக

அரியயற்கு அறிதற்கு... 
  
அரவினில் துயிதரும் அரியும் நற் பிரமனும் அன்று அயர்ந்து
குரைகழல் திருமுடி அளவிட அரியவர --          சம்பந்தர் தேவாரம்.

அண்ணல் அன்பு செய்வாரவர்க்  கெளியவர் அரியவர் அல்லார்க்கு..-                     --                               சம்பந்தர் தேவாரம்  

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published