F

படிப்போர்

Friday 2 August 2013

238. ஒருவழிபடாது

238
சோமநாதன் மடம்
(புத்தூர் அருகில் உள்ளது)

         தனதனன தான தான தனதனன தான தான
          தனதனன தான தான                         தனதான

        ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
          முழலுமநு ராக மோக                          அநுபோகம்
      உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
             வுளமுநெகிழ் வாகு மாறு                   அடியேனுக்
     கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
           மெனமொழியும் வீசு பாச                         கனகோப
     எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
           யெனதுபகை தீர நீயும்                       அருள்வாயே
     அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
           அடைவுதவ றாது பேணும்                    அறிவாளன்
     அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
           அவனிபுகழ் சோமநாதன்                        மடமேவும்
     முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
           முகரசல ராசி வேக                            முனிவோனே
     மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
           முனியஅறி யாத தேவர்                         பெருமாளே
       
பதம் பிரித்தல்

ஒரு வழி படாது மாயை இரு வினை விடாது நாளு(ம்)
உழலும் அநுராக மோக அநுபோகம்

ஒருவழி படாது = ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல் மாயை இருவினை = மாயைகளும் இரண்டு வினைகளும் விடாது = என்னை விடாமல் நாளும் உழலும் = தினந்தோறும் அலைச்சல் தருகின்ற அநுராக மோகம் = காம லீலை மோக அநுபோகம் = அனுபவத்தில் பட்டு

உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒரு கால் இராத
உளமும் நெகிழ்வு ஆகமாறு அடியேனுக்கு

உடலும் உயிர் தானுமாய் - உடலும் உயிரும் எண்ணமதாய் உணர்வில் ஒரு கால் இராத = (உன்) உணர்ச்சியில் ஒரு போதும் இல்லாத உளமும் நெகிழ்வு ஆகுமாறு = என் உள்ளமும் நெகிழ்ந்து கசியும்படி அடியேனுக்கு = அடியேனுக்கு

இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம்
என மொழியும் வீசு பாச கன கோப

இரவு பகல் போன = இரவும் பகலும் கடந்த ஞான பரம சிவ யோகம் = பரம சிவ ஞான யோகமே தீரம் என மொழியும் = தைரியத்தைத் தருவது என்று மொழிந்து காட்டுவதும் வீசு பாச = வீசப்படும் பாசக் கயிற்றைக் கொண்ட கன கோப = மிகக் கோபங் கொண்ட 

எம படரை மோது(ம்) மோன உரையில் உபதேச வாளை
எனது பகை தீர நீயும் அருள்வாயே

எம படரை = எம தூதர்களை மோதும் = மோதி வெருட்டத் தக்க மோன உரையில் = மௌன நிலையை உபதேச வாளை = உபதேசம் என்கின்ற வாளை எனது பகை தீர = எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிந்து போக நீயும் அருள்வாயே = தயை கூர்ந்து அருள் புரிய வேண்டும்

அரிவை ஒரு பாகமான அருணகிரி நாதர் பூசை
அடைவு தவறாது பேணும் அறிவாளன்

அரிவை ஒரு பாகமான = உமா தேவியை ஒரு பாகத்தில் உள்ள அருணகிரி நாதர் = அருணசால மூர்த்தியின் பூசை அடைவு = பூசை முறைகளை தவறாது பேணும் = ஒழுங்கு தவறாமல் போற்றுகின்ற அறிவாளன் = அறிவாளியும் 

அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன்
அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும்

அமணர் குல காலனாகும் = சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவரும் அரிய தவ ராஜராஜன் = அருமையான தவ அரசனும் அவனி புகழ் = உலகம் புகழும் சோமநாதன் மடம் மேவும் = சோமநாதன் மடத்தில் வீற்றிருக்கும் 

முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ
முகர(ம்) சல ராசி வேக முனிவோனே

முருக = முருகனே பொரு சுரர் சேனை = சண்டை செய்கின்ற சூராதிகளின் சேனை முறிய = முறி பட்டு அழியவும் வட மேரு விழ = வடக்கில் உள்ள மேரு மலை பொடிபட்டு விழவும் முகரம் = பேரொலி செய்யும் சலராசி வேக = கடல் வெந்து வற்றவும் முனிவேனே = கோபித்தவனே

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு
முனிய அறியாத தேவர் பெருமாளே

மொழியும் = உன்னைத் துதிக்கும் அடியார்கள் = அடியவர்களின் கோடி குறை = கோடிக்கணக்கான குறைகளை கருதினாலும் = கருதி உன்னிடம் முறையிட்டாலும் வேறு = அவர்களின் எண்ணத்துக்கு மாறாக முனிய அறியாத = அவர்கள் மேல் கோபிப்பதை அறியாத தேவர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே

சுருக்க உரை

ஒரு வழியில் நிற்க முடியாமல் மாயைகளும் இரு வினைகளும் என்னை விடாமல், காம போகத்தில் ஈடுபட்டு, என் உடல் உயிரைப் பற்றிய சிந்தையே உள்ளவனாக, நீ உள்ளாய் என்னும் உணர்ச்சியே ஒரு போதும் இல்லதவனாய், நான் அலைச்சல் உறுகின்றேன் ஆதலால் என் உள்ளம் நெகிழ்ந்து கசியும்படி, இரவு பகல் கடந்த ஞான யோகத்தைக் காட்டி, யம தூதர்களை வெருட்டத் தக்கதான மௌன ஞான உபதேசத்தைத் தந்தருளி உட்பகை, புறப்ககை யாவும் ஒழிந்து பட அருள் புரிய வேண்டும் 

அருணாசல மூர்த்தியின் பூசை முறைகளைத் தவறாமல் போற்றும் அறிவாளியும், சமண குலத்துக்கு ஒரு யமன் போன்றவனாகத் தோன்றும் முருகனே அடியார்கள் குறைகளைத் தீர்க்கும் பெருமாளே, மௌன உபதேச வாளை எனக்குக் கொடுத்து அருள்வாயே

விளக்கக் குறிப்புகள்

அவனிபுகழ் சோமநாதன் மடமேவும்
புத்தூரில் உள்ள சிவாலயத்தில் காணும் சாசனம் ஒன்று சோமநாத ஜீயருக்கு
இக்கோயில் உரிமையானது என்ற சாசனம் உள்ளது இவர் அண்ணாமலை யாரைத் தவறாது பூசித்து வந்ததோடு, தமக்கு உரிய கோயிலில் முருகனையும் வழிபட்டு வந்தார்  -வசு செங்கல்வராய பின்ளை

ஒப்புக

1 ஒருவழிடாது மாயை  
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
புண்ணியங்காள், தீவினைகாள், திருவே நீங்கள்
இம்மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்                ---..... திருநாவுக்கரசர் தேவாரம்

2 எமபடரை மோது மோன

எனது மனசிற் பரம சுக மவுன கட்கமதை

யமன்முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்---வேடிச்சி காவலன் வகுப்பு 18 
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published