F

படிப்போர்

Wednesday 31 July 2013

235.தினமணி

235
சீகாழி

             தனதன தாந்ததான தனதன தாந்ததான
               தனதன தாந்ததான                     தனதான

தினமணி சார்ங்கபாணி யெனமதிள் நீண்டுசால
     தினகர னேய்ந்தமாளி                       கையிலாரஞ் 
செழுமணி சேர்ந்தபீடி கையிலிசை வாய்ந்தபாடல்
     வயிரியர் சேர்ந்துபாட                         இருபாலும்
இனவளை பூண்கையார்க வரியிட வேய்ந்துமாலை 
     புழுககில் சாந்து பூசி                                யரசாகி
இனிதிறு மாந்துவாழு மிருவினை நீண்டகாய
     மொருபிடி சாம்பலாகி                         விடலாமோ
வனசர ரேங்கவான முகடுற வோங்கிஆசை
     மயிலொடு பாங்கிமார்க                           ளருகாக
மயிலொடு மான்கள்சூழ வளவரி வேங்கையாகி
     மலைமிசை தோன்றுமாய                    வடிவோனே
கனசமண் மூங்கர்கோடி கழுமிசை தூங்கநீறு
     கருணைகொள் பாண்டிநாடு                 பெறவேதக்
கவிதரு காந்தபால கழுமல பூந்தராய
     கவுணியர் வேந்ததேவர்                       பெருமாளே

பதம் பிரித்து உரை

தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால
தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம்

தினமணி = சூரியன் சார்ங்க பாணி = சாரங்கம் என்னும் வில்லைக் கையில் ஏந்திய திருமால் என = என்று சொல்லும்படியாக மதிள் நீண்டு = மதில் நீளமுள்ளதாய் சால = மிகுந்த தினகரன் ஏய்ந்த = சூரியனுடைய ஒளி பொருந்திய மாளிகையில் = அரண்மனையில் ஆரம் = முத்தாலும்

செழு மணி சேர்ந்த பீடிகையில்  இசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட இருபாலும்

செழு மணி சேர்ந்த = அழகுள்ள இரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடிகையில் = பீடத்தில் (அமர்ந்து) இசை வாய்ந்த பாடல் = இசை பொருந்திய பாடல்களை வயிரியர் = பாணர்கள் சேர்ந்து பாட = ஒன்று கூடிப் பாடவும் இரு பாலும் = இரண்டு பக்கங்களிலும்

இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை
புழுகு அகில் சாந்து பூசி அரசாகி

இன = ஒரே விதமான வளை பூண் கையர் = வளையல்கள் அணிந்த கையை உடைய மாதர்கள் கவரி இட = கவரி வீச வேய்ந்து மாலை = மாலைகளைச் சூடி புழுகு = புனுகு சட்டம் அகில்  சாந்து பூசி = அகில், சந்தனம் இவைகளைப் பூசிக் கொண்டு அரசாகி = அரசு பதவியிலிருந்து 
இனிது இறுமாந்து வாழும் இரு வினை நீண்ட காயம்
ஒரு பிடி சாம்பலாகி விடலாமோ

இனிது இறுமாந்து = இன்ப மயமாய் மிக்க பெருமையுடன் வாழும் = வாழ்கின்ற இரு வினை = இரு வினைகளுக்கு ஏதுவான நீண்ட காயம் = ஈடான இந்தப் பெரிய உடல் ஒரு பிடி சாம்பலாகி = ஒரு கையளவு சாம்பலாகி விடலாமோ  அழிந்து படலாமோ  = அழிந்து போகலாமோ?

வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை
மயிலொடு பாங்கிமார்கள் அருகாக

வனசரர் = காட்டில் திரியும் வேடர்கள் ஏங்க = அதிசயித்து ஆரவாரிக்க வானம் முகடு உற = வானத்தின் உச்சியைத் தொடும்படி ஓங்கி = வளர்ந்து ஆசை மயிலொடு = (தான் ஆசையாக வார்த்த) மயிலும் பாங்கிமார்கள் = தோழிகளும் அருகாக = சமீபத்தில் இருக்க

மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி
மலை மிசை தோன்று(ம்) மாய வடிவோனே

மயிலொடு  மான்கள் = மயிலும் மான்களும் சூழ = சூழ வளவரி = செழித்து உயர்ந்த வேங்கையாகி = வேங்கை மரமாகி மலை மிசை = (வள்ளி) மலை மேல் தோன்றும் = தோன்றிய மாய வடிவோனே = மாய வடிவத்தனே

கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு 
கருணை கொள் பாண்டி நாடு பெற வேத

கன சமண் மூங்கர் = பெருத்த சமண் ஊமையர்கள் கோடி = பலரும் கழு மிசை = கழுவின் மேல் தூங்க = தொங்க நீறு கருணை கொள் = திருநீற்றைப் பெற்று உன் கருணைக்கு பாத்திரமான பாண்டி நாடு பெற = பாண்டிய நாடடில் பரவ வேத = வேதப் பொருள் கொண்ட

கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் 
கவுணியர் வேந்த தேவர் பெருமாளே

கவி தரு = (சம்பந்தராக வந்து) தேவாரப் பாடல்களை அருளிய காந்த = ஒளிகொள் மேனியனே பால = குழந்தையே கழுமல
பூந்தராய் = கழுமலம், பூந்தராய் என்னும் பெயர்கள் கொண்ட சீகாழிப் பதியனே  கவுணியர் = கவுணிய குலத்தின் வேந்த = அரசே தேவர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே

சுருக்க உரை

சூரியன், திருமால் என்னு சொல்லும்படி ஒளி மிகுந்த மதில்களை உடைய மாளிகையில் முத்தாலும், இரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடிகையில் அமர்ந்து, பாணர்கள் இரு பக்கங்களிலும், அமர்ந்து இசை முழங்கவும், மாதர்கள் கவரி வீசவும், வாசனைப் பொருட்களை அணிந்து பெருமையுடன் வாழ்கின்ற, வினைக்கு ஏதுவான இவ்வுடல் எரிந்து சாம்பலாக, நான் அழிந்து படலாமோ

வேடர்கள் திகைக்க வள்ளி மலையில் வேங்கை மரமாகிய மாய வடிவத்தனே, சமணர்கள் கழுவில் ஏறவும், பாண்டிய நாட்டில் வேதப் பொருள் பரவவும், சம்பந்தராக வந்து தேவாரப் பாடல்களை அருளியவனே, கழுமலம், பூந்தராய் என்னும் பெயர்களைக் கொண்ட சீகாழியில் வீற்றிருப்பவனே, கவுணிய குலத்தவனே, தேவர் பெருமாளே, உடல் அழிந்து நான் சாம்பலாகி விடலாமோ?

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published