F

படிப்போர்

Tuesday 11 December 2012

179.கொடிய மறலி

          தனன தனதன தனதன தனதன
            தனன தனதன தனதன தனதன
            தனன தனதன தனதன தனதன   தனதான

கொடிய மறலியு மவனது கடகமு
  மடிய வொருதின மிருபதம் வழிபடு
  குதலை யடியவ னினதருள் கொடுபொரு        மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
  மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
  கொடியு மகிலமும் வெளிபட இருதிசை       யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
  திகிரி திகிரியும் வருகென வருதரு
  பவுரி வருமொரு மரகத துரகத                 மிசையேறிப்
பழய அடிவ ருடனிமை யவர்கண
  மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
  பரவ வருமதி ருலருணையி லொருவிசை       வரவேணும்
சடில தரவிட தரபணி தரதர
  பரசு தரசசி தரசுசி தரவித
  தமரு கமிருக தரவனி தரசிர                         தரபாரத்
தரணி தரதநு தரவெகு முககுல
  தடினி தரசிவ சுதகுண தரபணி
  சயில விதரண தருபுர சசிதரு                மயில்வாழ்வே
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
  எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
  நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ          நெடுவானும்
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
  நிகில சகலமு மடியவர் படைதொடு
  நிருப குருபர சுரபதி பரவிய                    பெருமாளே.
-179 திருச்செங்கோடு

பதம் பிரித்தல் பத உரை

கொடிய மறலியும் அவனது கடகமும்
மடிய ஒரு தினம் இரு பதம் வழி படு
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண

கொடிய மறலியும் = கொடுமையான யமனும் 
அவனது கடகமும்=அவனுடன் வந்த சேனையும்
மடிய = இறந்து படும்படி ஒரு தினம் = ஒவ்வொரு நாளும் இரு பதம் வழிபடு = திருவடிகளை வழிபட்டு நிற்கும் குதலை அடியவன் = (இந்த)மழலைச் சொல் பேசும் குழந்தையாகிய நான் நினது = உன்னுடைய.
அருள் கொடு = திருவருளைத் துணையாகக் கொண்டு பொரு அமர் காண = சண்டை யிடும் போர் செய்வதைப் பார்ப்பதற்கு

குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும்
அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ்
கொடியும் அகிலமும் வெளி பட இரு திசை இரு நாலும்

பார்ப்பதற்கு=  பார்ப்பதற்கு குறவர் மகள் புணர் = குறவர் பெண்ணாகிய வள்ளி அணையும் புய கிரி சமுகமும் = கூட்டமான பன்னிரண்டு புய மலைகளும் அறு முகமும் = ஆறு திருமுகங்களும் வெகு நயனமும் = பலவான கண்களும் ரவி உமிழ் கொடியும் = சூரியனை வெளிப் படுத்தும் கொடியாகிய கோழியும் அகிலமும் வெளி பட = ஆகிய அனைத்தும் வெளிப்பட இரு திசை இரு நாலும் = பெரிய எட்டுத் திசைகளையும்.

படியு(ம்) நெடியன எழு புணரியும் முது
திகிரி திகிரியும் வருக என வரு தகு
பவுரி வரும் ஒரு மரகத துரகதம் மிசை ஏறி

படியும் = பூமியையும் நெடியன = பெரிதாய் உள்ள எழு புணரியும் = ஏழு கடல்களையும்.
முது = பழைய திகிரி திகிரியும்= சக்கரவாளக் கிரியையும் வருக என = வலம் வர வேண்டுமென்றாலும் வரு தகு பவுரி = வரத் தக்கதாய் வலம் வந்த ஒரு = ஒப்பற்ற. மரகத = பச்சை நிறமான துரகதம் மிசை ஏறி = குதிரையாகிய மயலின் மீது ஏறி.

பழய அடியவர் உடன் இமையவர் கணம்
இரு புடையும் மிகு தமிழ் கொ(ண்)டு மறை கொ(ண்)டு
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வர வேணும்

பழய அடியவர் உடன் = பழைய அடியவர் களுடன் இமையவர் கணம் = தேவர்கள் கூட்டம் இரு புடையும் மிகு = இரண்டு பக்கத்திலும் வர மிக்கெழுந்த தமிழ் கொ(ண்)டு =தமிழ் கொண்டும் மறை கொ(ண்)டு= வேதங் களை ஓதி பரவ = போற்ற அருணையில் = (அன்று அடியேனை ஆட்கொள்ள) திருவண்ணாமலையில் வரும் அதில் = வந்தது போல ஒரு விசை வர வேணும் = ஒரு முறை வந்து அருள வேண்டும்.

சடிலதர விடதர பணிதர தர
பரசுதர சசிதர சுசிதர வித
தமருக மிருகதர வனிதர சிரதர பார

சடிலதர = சடாபாரத்தைத் தரித்தவரும்  
விட தர = ஆலகால விடத்தை உண்டு (கண்டத்தில்) தரித்தரும் பணி தர =
பாம்பைத் தரித்தவரும் தர பரசு தர = மேலான மழு ஆயுதத்தைத் தரித்தவரும்
சசி தர = சந்திரனைத்தரித்தவரும் சுசி தர =
தூய்மையானவரும் வித = பலவிதமான.
தமருக மிருக தர = உடுக்கையையும் மானையும் தரித்தவரும் வ(ன்)னி தர = அக்கினியைக் கரத்தில் தரித்தவரும்சிர தர = கபாலத்தைத் தரித்தவரும் பார = பாரமான.

தரணிதர தநுதர வெகு முக குல
தடினிதர சிவ சுத குணதர பணி
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே

தரணி தர = பூமியைத் தாங்கும் தநு தர = மேரு மலையாகிய வில்தை தரித்தவரும்
வெகு முக = பல முகமாகப் பரந்து ஓடும்
தடினி தர குல = மேலான நதியாகிய கங்கையைத் தரித்தவரும் சிவ சுத = (ஆகிய) சிவபெருமானின் குமரனே குண தர = நற் குணம் வாய்ந்தவனே பணி சயில = பாம்பு மலை என்னும் திருச் செங்கோட்டு மலையில் வீற்றிருக்கும் விதரண = கருணை நிதியே தரு புர = கற்பக மரங்கள் உள்ள நகரமாகிய பொன்னுலகில் சசி தரு = இந்திராணி (வளர்த்த) மயில் வாழ்வே = மயில் போன்ற தேவசேனைக்குத் நாயகனே.

நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ
எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும்

நெடிய உடல் = பெரிய உடலும் உரு இருள் எழ = இருண்ட உருவும் எழவும் எயிறு நிலவு = பற்கள் நிலா போல வெண்ணிற ஒளியை வீசி எழ  = எழவும் சுழல் விழி= சுழலுகின்ற கண்களில் தழல் எழ = நெருப்பு எழவும்.
எழு கிரி நெரிய = ஏழு மலைகளும் நெரி பட அதிர் குரல் புகை எழ = அதிர்ச்சி செய்யும் குரலில் புகை தோன்றவும் இடி எழ = இடி போல ஒலி பிறக்கவும் நெடு வானும் = பெரிய விண்ணுலகும்

நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம்
நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே.

நிலனும் = மண்ணுலகும் வெருவர = அச்சம் கொள்ளவும் வருநிசிசரர்= வந்த அசுரர்களின் தளம் = சேனை  நிகில சகலமும் = ஒன்று கூட பாக்கியின்றி எல்லாமும் மடிய = இறக்கும்படி ஒர் = ஒப்பற்ற படை தொடு =
வேலைச் செலுத்திய நிருப= அரசே குருபர = குரு மூர்த்தியே சுர பதி = தேவர்கள் தலைவனான இந்திரன் பரவிய = போற்றிய. பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

கொடியவானான யமனும் அவன் படைகளும் இறந்து போகும்படி, ஒரு நாள் உனது திருவடிகளை வழிபட்டு நிற்கும் குழந்தையாகிய அடியேன் உன்னுடைய துணையால், சண்டையிடும் போரினைப் பார்ப்பதற்கு, வள்ளி அணையும் பன்னிரு புயங்களும், ஆறு முகங்களும், பல கண்களும் ஒன்றாகத் திகழ, கோழிக் கொடியுடன், உலகை வலம் வந்த பச்சை மயில் மீது ஏறி, அடியார்கள் தமிழில் பாட, மறையோர்கள் வேதங்களை ஓத என்னை ஆட்கொள்ள வரவேண்டும்.

சடை, பாம்பு, கண்டத்தில் விடம், மழு, உடுக்கை, மான், நெருப்பு கபாலம், ஆகியவைகளைத் தரித்து, மேரு மலையாகிய வில்லையும்,
கங்கையையும் தரித்த சிவபெருமான் பெற்ற குமரனே, திருச்செங்கோடு என்னும் பாம்பு மலையில் உறையும் கருணை நிதியே. இந்திராணியின் மகளான தேவசேனையின் நாயகனே, கோபத்துடன் போருக்கு வந்த அசுரர்கள் மாளும்படி வேலைச் செலுத்திய அரசே, குரு மூர்த்தியே,
தேவர்கள் பெருமாளே, யமன் மடியப் போகும் போரினைக் காண என்
முன்னே வரவேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

1. குதலை அடியேன்...
    அடியார்களுக்கு தான் ஒரு குழந்தை எனப் பொருள்படும்.

2. திகிரி திகிரி = சக்ரவாள கிரி. குல = புனிதமான. தடினி = ஆறு (கங்கை).

ரவி உமிழ் கொடியும் அகிலமும்....

ஒப்புக
   
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
     புகல்பொற்குக் குடவெற்றிக் கொடியோனே                 ...திருப்புகழ், அயிலபுக்க.
   
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
     வெல்லப்ப தாகை கொண்ட திறல்வேலா                    ... திருப்புகழ், கையொத்து.

 திருவண்ணாமலையில் முருகன் தரிசனம் தந்ததை நினைவு கூறுகிறார்

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published