F

படிப்போர்

Friday 30 November 2012

168.எழுகுநிறை

                     தனதனன தான தனதனன தான
                    தனதனன தான     தனதான

          நாபி அரிபிரமர் சோதி
             யிலகுமரன் மூவர்                      முதலானோர்
         இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
             யெழுமமிர்த நாறு                         கனிவாயா
         புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
             புநிதனென ஏடு                           தமிழாலே
         புனலிலெதி ரேற சமணர்கழு வேற
             பொருதகவி வீர                            குருநாதா
         மழுவுழைக பால டமரகத்ரி சூல
             மணிகரவி நோத                        ரருள்பாலா
         மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
             வளமைபெற வேசெய்                முருகோனே
         கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
             கதிருலவு வாசல்                     நிறைவானோர்
         கடலொலிய தான மறைதமிழ்க ளோது    
            கதலிவன மேவு                            பெருமாளே
-168திருக்கழுக்குன்றம்
(கதலிவனம், வேதகிரி, பக்ஷிதீர்த்தம்)

பதம் பிரித்து உரை

  எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி
  இலகும் அரன் மூவர் முதலானோர்

எழுகு = ஏழு உலகங்களையும்.
நாபி நிறை = தனது கொப்பூழில்) கொண்ட
அரி = திருமால்                பிரமர் = பிரமன்
சோதி இலகும் அரன் = சோதி உருவம் விளங்கும் சிவபெருமான்
மூவர் முதலானோர் = இந்த மூவர் முதலான பிற தேவர்கள் யாவருக்கும்.

  இறைவி எனும் ஆதி பரை முலையினில் ஊறி
  எழும் அமிர்தம் நாறு(ம்) கனி வாயா

இறைவி = தலைவி எனப்படும்
ஆதி பரை = ஆதி பராசக்தியின்
முலையினில் ஊறி = கொங்கையில் ஊறி
எழும் அமிர்தம் = எழுந்த ஞானப் பால்
நாறும் = மணக்கும்
கனி வாயா = இனிமை வாய்ந்த வாயை உடையவனே.

   புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான
   புநிதன் என ஏடு தமிழாலே
புழுகு = புனுகு                  ஒழுகு = நிறைந்துள்ள
காழி = சீகாழியில்            
கவுணியரில் = கவுணியர் குலத்தில்
ஞான புனிதன் = ஞான பரிசுத்த மூர்த்தியாகிய ஞானசம்பந்தன்
என = எனத் தோன்றி
ஏடு தமிழாலே = வெள்ளத்தில் இட்ட தமிழ் ஏடுகளின் மேன்மையால்.

    புனலில் எதிர் ஏற சமணர் கழு ஏற
    பொருத கவி வீர குருநாதா

புனலில் எதிர் ஏற = நீரில் எதிர் செல்ல
சமணர் கழு ஏற = சமணர்கள் கழுவில் ஏறும்படி
பொருத கவி = வாதப் போர் செய்த
வீர = வீரனே
குரு நாதா = குரு நாதரே.

   மழு உழை கபால தமரகம் த்ரி சூல
   மணி கர விநோதர் அருள் பாலா

மழு = (சிவனுடைய ஆயுதமாகிய) மழு.
உழை = மான்              கபாலம் = மண்டை ஓடு
தமரகம் = துடி            
த்ரி சூலம் = முத்தலைச் சூலம்
மணி கர = (இவற்றை ஏந்தும்) திருக் கரங்களை உடைய
விநோத = அற்புத மூர்த்தியாகிய சிவபெருமான்
அருள் பாலா = பெற்றருளிய பாலனே

  மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை
  வளமை பெறவே செய் முருகோனே

மலர் அயனை=தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனை
நீடு = பெரிய
சிறை செய்தவன் = சிறையில் வைத்து
வேலை = பிரமனது சிருட்டித் தொழிலை
வளமை பெறவே = செம்மையாக
செய் முருகோனே = செய்த முருகனே

   கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு
   கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கழுகு தொழு = கழுகு தொழுகின்ற
வேதகிரி சிகரி = திருக்கழுக் குன்றம் என்னும் மலையின் மீது
வீறு = விளங்கும்
கதிர் உலவு = ஒளி பொருந்திய.
வாசல் = வாசலில்
நிறை வானோர் = கூட்டமாய் நிறைந்த தேவர்கள்

   கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது
   கதலி வனம் மேவும் பெருமாளே.

 கடல் ஒலியதான = கடலின் ஒலி போலப் பெரு முழக்குடன்.
மறை தமிழ்கள் ஓதும் = வேதங்களையும், தமிழ்ப்பாக்களையும் ஓதுகின்ற.
  கதலி வனம் = வாழைக் காடு எனப்படும் திருக்கழுக் குன்றத்தில்
மேவு பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

அரி, அயன், அரன் ஆகிய யாவர்க்கும் தலைவியான ஆதி பராசக்தியின்
கொங்கையில் ஊறிய ஞானப்பாலைப் பருகிய இனிமைவாய்ந்த வாயை
உடையவனே. ஞானசம்பந்தராக அவதரித்து வைகையில் ஏடுகளை நீரில்
எதிர் செல்ல விட்டு வாதப் போர் செய்த கவி வீரனே. மான், மழு, கபாலம் ஏந்திய சிவபெருமானின் பாலனே,
பிரமனைக் குட்டிச் சிறையிலிட்டு சிருஷ்டித் தொழிலைச் செய்தவனே,
மறைகள் கடல் போல் ஒலிக்கும் வேதகிரியில் வீற்றிருக்கும்பெருமாளே,
உம்மைத் துதி செய்கிறேன்.

விளக்கக் குறிப்புகள் 

1. இறைவி.....
   அரன் அரி அயன் அண்டர்க் கரியாள்)--திருப்புகழ் ( சகசம்பக்குடை).
   2. மலர் அயனை...

பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு அவனது
சிருட்டித் தொழிலை முருகவேள் தாமே செய்தார். 
 (  கமலத்தனை மணிக்குடுமி பற்றி மலர் சித்திர கரத்தலம் வலிப்ப பல
குட்டி நடனம்)—    திருப்புகழ் (சுத்தியநர).

3. கடல் ஒலியதான மறை...
  முழாவொலி யாழொலி முக்க ணாயகன்
    விழா வொலி மணத்தோலி வேள்வி யாவையும்
    வழா வொலி மறை யொலி வானை யுங்கடந்
    தெழா வொலி கடல் கிளர்ந் தென வொலிக்கு மால்)--அந்தகக் கவி வீரராகவ    
  முதலியார், திருக்கழுக்குன்றப் புராணம் நகர 13.
4. காழி கவுணியரில் ஞான புநிதன் என....
    எழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட
    மாற னும்பிணி தீர வஞ்சகர்
    பீறு கொண்டிட வேற வென்றிடு    முருகோனே)--    -திருப்புகழ் மூலமந்த்ர
 
   நுகர்வித்தகமாகு மென்றுமை மொழியிற்பொழி பாலையுண்டிடு
   நுவல்மெய்ப்புள பால னென்றிடு மிளையோனே)---     திருப்புகழ், பகிதற்கரி.
  
பெரிய புராண வரலாறு     
சீர்காழியில் சிவபாத இருதயர் என்ற ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார் – அவர் மனைவி பகவதியம்மாள். அவர்களின் மகந்தான் சம்பந்த பெருமான். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் கரையில் குழந்தையை அமர்த்தி நீராடிட்டு வருவது வழக்கமாக்க் கொண்டிருந்தார். ஒருநாள் பசியானால் குழந்தை அழுதது. நீராடி கொண்டிருந்த தந்தையாருக்கு குழந்தை அழும் சத்தம் காதில் கேட்க வில்லை. பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி உமையம்மையை நோக்கி `அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக` எனச் சொல்ல. அம்பாளும் குழந்தைக்கு கையில் பொற் கிண் ணத்தில் கொண்டு வந்த பாலை ஊட்டினார். குழந்தையின் அழுகையும் நின்றது.  அப்படியே இருவரும் மறைந்து விட்டனர். சிவஞான முதமாகிய பாலை உண்டதானால் தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞான சம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார்.

குளித்துவிட்டு வந்த இருதயர் குழந்தையின் வாயில் வழிந்திருந்த பாலைப் பார்த்துவிட்டு, பிறர் கொடுக்கும் பாலைக் குடிக்கலாமா? யார் கொடுத்தது இது?’ என்று அதட்டினார்.

‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம்
கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே…’

என்று துவங்கி ஒரு பதிகத்தைப் பாடிய படியே தோணியப்பரையும்,
அம்பிகையையும் ட்டிக்காட்டி  அவர்கள்தான் பால் கொடுத்தார்கள் என்றது குழந்தை.  பின்னால் ஒரு தலை சிறந்த சிவபக்தனாக விளங்க காரணமாக இருந்த இந்த சம்பவத்தைதான் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published