F

படிப்போர்

Saturday 24 November 2012

156.மாதர்வசம்

                                  தானதன தானத்    தனதான

மாதர்வச மாயுற்           றுழல்வாரும்
   மாதவமெ ணாமற்        றிரிவாரும்
தீதகல வோதிப்            பணியாரும்
   தீநரக மீதிற்              றிகழ்வாரே
நாதவொளி யேநற்            குணசீலா
   நாரியிரு வோரைப்      புணர்வேலா
சோதிசிவ ஞானக்              குமரேசா
   தோமில் கதிர்காமப்     பெருமாளே.
-    156 கதிர்காமம்

பதம் பிரித்தல்

மாதர் வசம் உற்று உழல்வோரும்
மா தவம் எ(ண்)ணாமல் திரிவோரும்

மாதர் வசம் = பெண்கள் வசப்பட்டு. உழல்வாரும் = திரிபவர்களும் மா தவம் எண்ணாமல் = நல்ல தவச் செயல்களை நினைக்காமல் திரிவாரும் = திரிபவர்களும்.

தீது அகல ஓதி பணியாரும்
தீ நரகம் மீதில் திகழ்வாரே
  
தீது அகல= தீமைகள் விலகும்படி ஓதி= (நல்ல நூல்களை) ஓதி பணியாரும் = பணியாதவர்களும் தீ நரகம் மீதில் = கொடிய நரகத்தில் திகழ்வாரே= விளக்கமுற்று கிடப்பார்கள்.

நாத ஒளியே நல் குண சீலா
நாரியர் இருவரை புணர் வேலா

நாத = நாதனே ஒளியே=சுடரே நல் குண் சீலா=நற்குணப் பரிசுத்தனே நாரியர் இருவரை = (வள்ளி - தெய்வயானை ஆகிய) பெண்கள் இருவரையும் புணர் வேலா = சேரும் வேலனே.

சோதி சிவ ஞான குமரேசா
தோம் இல் கதிர்காம பெருமாளே.

சோதி = சோதியே சிவ ஞானக் குமரேசா = சிவஞானக் குமரேசனே தோம் இல் = குற்றம் இல்லாத கதிர்காமப் பெருமாளே = கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மாதர்கள் வசப்பட்டுத் திரிபவர்களும், நல்ல தவச் செயல்களை எண்ணாதவர்களும், தீமைகள் விலக நல்ல நூல்களைக் கல்லாதவர்களும் கொடிய நரகத்தில் விழுந்து கிடப்பார்கள்.

நாதனே, சுடரே, நற்குணத் தூயவனே, நற்குண சீலனே, வள்ளி, தெய்வயானை ஆகிய இருவரையும் புணரும் வேலனே, சோதியே, சிவஞானக் குமரேசனே, குற்றமில்லாத கதிர்காமப் பெருமாளே. நான் பெண்கள் வசப்படாமல் காத்து, நரகில் விழுவதை விலக்குவாயாக.

ஒப்புக

 நாத ஒளியே...
   ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே)         ... .                திருநாவுக்கரசர் தேவாரம்
   நாதவிந்து கலாதி நமோநம)           ...                            திருப்புகழ், நாதவிந்து

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published