F

படிப்போர்

Saturday 10 November 2012

144.வினைக்கின மாகும்

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
   பினுக்கெதி ராகும்                            விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
   சமத்திடை போய்வெந்                 துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
   கருக்குழி தோறுங்                            கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
   கழற்புக ழோதுங்                         கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
   சியைப்புணர் வாகம்                        புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
   பொருக்கெழ வானும்                      புகைமீளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
   திறக்கம ராடுந்                              திறல்வேலா
திருப்புகழ் ழோதுங் கருத்தினர் சேருந்
   திருத்தணி மேவும்                         பெருமாளே.
-      144 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு
எதிர் ஆகும் விழி மாதர்

வினைக்கு இனமாகும் = வினையைப் பெருக்குவதற்குக் காரணமான. தனத்தினர் = கொங்கையை உடையவர்கள் வேள் = மன்மதனுடைய அம்பினுக்கு எதிர் ஆகும் = அம்புக்கு ஒப்பாகும் விழி மாதர் = கண்களை உடைய விலை மாதர்கள் (மீது வைத்த ஆசையால்).

மிக பல மானம் தனில் புகுதா வெம்
சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி

மிகப் பல = மிகப் பலவான மானம் தனில் புகுதா = அவமானச் செயல்களில் நுழைந்து வெம் சமத்திடை = விரும்பிய (கலவிப்) போர்களில் போய் = ஈடுபட்டு வெம் துயர் மூழ்கி = கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து.

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும்
கரு குழி தோறும் கவிழாதே

கனத்த விசாரம் = தாங்குதற்கு அரிய கவலை அடைந்து. பிறப்பு அடி தோயும் = பிறவிக்கு அடி கோலும் கருக் குழி தோறும் = கருக்குக்குள் தோறும். கவிழாதே = நான் கவிழாமல்.

கலை புலவோர் பண் படைத்திட ஓதும்
கழல் புகழ் ஓதும் கலை தாராய்

கலைப் புலவோர்கள் = கலை வல்ல புலவர்கள் பண் படைத்திட = சீராக ஓதும் = ஓதியுள்ள கழல் புகழ் = (உனது) திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை தாராய் = கலை ஞானத்தைத் தந்தருளுக.

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை
புணர் வாகம் புய வேளே

புனத்து இடை போய் = (தினைப்) புனத்துக்குப் போய் வெம் = கொடிய சிலைக் குறவோர் = வில்லேந்திய குறவர்களின் கொடி = கொடி போன்ற வள்ளியை புணர் = சேர்ந்த  வாகம் புய வேளே = அழகிய புயங்களை உடையவனே.

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும்
பொருக்க எழ வானும் புகை மூள

பொருப்பு = (கிரவுஞ்ச) மலை. இரு கூறும் பட = இரண்டு கூறாகும்படியும். கடல் தானும் = கடலும். பொருக்கி எழ = வற்றி போகவும். வானும் = வானமும். புகை மூள = புகை கொள்ள.

சினத்தோடு சூரன் கனத்த தி(ண்)ணிய மார்பம்
திறக்க அமர் ஆடும் திறல் வேலா

சினத்தோடு = கோபத்துடன் சூரன் = சூரனுடைய கன = கனத்த தி(ண்)ணி = திண்ணிய மார்ப(க)ம் மார்பு திறக்க = பிளவுபட அமர் ஆடும் திறல் வேலா = போர் செய்த வீர வேலாயுதனே.

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும் பெருமாளே.
திருப்புகழ் ஓதும் = திருப்புகழ் ஓதும் கருத்தினர் = கருத்துள்ள அடியார்கள் சேரும் = கூடுகின்ற திருத்தணி மேவும் பெருமாளே = திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

வினைக்கு ஏதுவான செயல்களில் ஈடுபடக் காரணமாகும் கொங்கைகளை உடையவர், மன்மதனின் அம்புக்கு நிகரான கண்களை உடையவர் ஆகிய விலை மாதர்கள் மீதுள்ள ஆசையால், பல விதமான அவமானச் செயல்களில் நுழைந்து, விரும்பிய கலவிப் போர்களில் ஈடுபட்டு, கொடிய துன்பங்களை அனுபவித்து, கவலை அடைந்து, பிறப்புக்கு அடி கோலும் கருக்குழியில் நான் கவிழாமல், புலவர்கள் சீராக ஓதியுள்ள உனது திருவடியின் புகழைப் பாடும்படியான கலை ஞானத்தைத் தந்து அருளுக.

வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்துக்குப் போய், குறவர் மகளான வள்ளியைப் புணர்ந்த அழகிய புயங்களை உடைய வேளே, கிரவுஞ்ச கிரி இரு கூறாகவும், கடல் வற்றிப் போகவும், சூரனுடைய மார்பு பிளக்கவும், போர் செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும் கருத்துடையவர்கள் கூடும் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் கழலை ஓதும் கலைத் திறனை எனக்குத் தந்து அருளுக.

விளக்கக் குறிப்புகள்

ஒரு நாளிரவு நேரத்தில் வள்ளிமலை சுவாமிகள் திருத்தணியில் ஒரு வீட்டின் திண்ணையிலிருந்துகொண்டு பாடியபோது,
-        தெருத்திண்ணை தோறும் திருப்புகழ் ஓதும் - 
என்று ஓர் அடியை மாற்றிப் பாடினாராம்.

அப்போது தணிகையில் அந்தணக் கோலத்தோடு முருகன் கையில் விசிறியுடன் திண்ணையில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டும் எழுந்து ஆடிக்கொண்டும் பரவசமாகக் காட்சி அளித்தாராம்.
அப்போது திருத்தணி மலையில் ஒரு பேரொளி எழுந்ததாம்.

இந்தச் சம்பவமே வள்ளிமலை சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று நள்ளிரவில் திருத்தணி திருப்புகழ் திருப்படி திருவிழா எடுப்பிக்கச் செய்தது. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஆங்கிலேயர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறும் வழக்கத்தை மாற்றவே ஸ்வாமிகள்1917-18 இந்த வழக்கத்தைத் துவக்கி வைத்தார் என்று கூறுவதும் உண்டு.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published