F

படிப்போர்

Saturday 10 November 2012

143.வரிக்கலை

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
   மயக்கிவிடு மடவார்கள்                            மயலாலே
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
   வயிற்றொலெரி மிகமூள                          அதனாலே
ஒருத்தருட னுறவாகி ஒருத்தாரொடு பகையாகி
   ஒருத்தர்தமை மிகநாடி                             யவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
   உயர்ச்சிபெறு குணசீல                          மருள்வாயே
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
   மிகுத்தபல முடனோத                         மகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
   விளைத்ததொரு தமிழ்பாடு                    புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
   திருக்கையினில் வடிவேலை              யுடையோனே
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
   திருத்தணிகை மலைமேவு                     பெருமாளே.
-143 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை
மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே

வரி = உயர்ச்சி கொண்டுள்ள கலையின் நிகரான = மானுக்கு ஒப்பான. விழிக் கடையில் = கடைக் கண்ணால் இளைஞோரை = இளைஞர்களை மயக்கியிடும் = மயக்கும். மடவார்கள் = பொது மகளிர். மயலாலே = மோகத்தால்

மதி குளறி உள்ள காசும் அவர்க்கு உதவி மிடியாகி
வயிற்றில் எரி மிக மூள அதனாலே

மதிக் குளறி = அறிவு குழப்பம் அடைந்து. உள்ள காசும் = தம்மிடமிருந்த பொருளையும் அவர்க்கு  உதவி = அவர்களிடம் கொடுத்து விட்டு வயிற்றில் எரி மிக = வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும்  மிடியாகி = வறுமை அடைந்து

ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரோடு பகையாகி
ஒருத்தர் தமை மிக நாடி அவரோடே

ஒருத்தருடன் உறவாகி = ஒருத்தருடன் நட்பு பூண்டும். ஒருத்தரோடு பகையாகி = ஒருத்தருடன் பகைமை பூண்டும் ஒருத்தர் தமை மிக நாடி  ]= வேறு ஒருவரை மிகவும் விரும்பியும்  அவரோடே = அவர்களோடு சேர்ந்து

உணக்கை இடு படு பாவி எனக்கு உனது கழல் பாட
உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே

உணக் கை இடு = உண்ணுவதற்கும் வேண்டிக் கையை நீட்டுகின்ற படு பாவி எனக்கு = பாவியாகிய எனக்கு உனது கழல் பாட = உன் திருவடிகளைப் பாடும்படியான உயர்ச்சி பெறு = சிறந்த. குண சீலம் அருள்வாயே = குணத் தூய்மையைத் தந்து அருளுக.

விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை
மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே

விரித்த = விரிவாக அருணகிரிநாதன் உரைத்த = அருணகிரி நாதன் பாடியுள்ள தமிழ் எனும் மாலை = திருப்புகழ் என்னும் தமிழ் மாலையை மிகுத்த பலமுடன் = மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே = ஓத மகிழ்பவனே.

வெடித்து அமணர் கழு ஏற ஒருத்தி கணவனும் மீள
விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே

வெடித்த = (பொறாமையினாலும், அவமானத்தாலும்) துடித்த அமணர் = சமணர்கள் கழு ஏற = கழுவில் ஏறவும் ஒருத்திகணவனும் = ஒப்பற்ற மங்கயர்க்கரசியின் கணவன் (கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன்) மீள்ள = (திருநீறிடும் வழிக்கு) மீண்டும் வரவும் விளைத்தது ஒரு = வழி செய்த ஒப்பற்ற தமிழ் பாடு புலவோனே = (தேவாரத் தமிழ்ப் பாடல்களைச் (சம்பந்தராக வந்து) பாடிய புலவனே.

செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது
திரு கையினில் வடி வேலை உடையோனே

செருக்கி இடு = ஆணவத்துடன் பொரு சூரர் = சண்டை செய்த அசுரர்களின் குலத்தை = குலத்தை அடி அற = அடியோடு அற்றுப் போக மோதும் = மோதித் தாக்கிய திருக்கையினில் = அழகிய கையில் வடிவேலை = கூரிய வேலாயுதத்தை உடையோனே = உடையவனே.

திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான
திருத்தணிகை மலை மேவு பெருமாளே.

திருக்குலவும் = அழகு விளங்கும் ஒரு = ஒப்பற்ற நீல மலர்ச் சுனையில் = நீலோற்பல மலர்ச் சுனையைக் கொண்ட அழகான = அழகு விளங்கும் திருத்தணிகை மலை மேவு பெருமாளே = தணிகை மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மானைப் போன்ற கண்களின் கடையால் இளைஞர்களை மயக்கும் விலை மாதர் மீதுள்ள மோகத்தால், அறிவு குழப்பம் அடைந்து, கைப் பொருளை அம்மாதர்களிடம் கொடுத்து, வறுமையில் வாடி, ஒருவரிடம் நட்பும், ஒருவரிடம் பகைமையும் பூண்டு, ஊடாடி, உண்ணுவதற்கும் பிறரிடம் கையை நீட்டும் பாவியாகிய எனக்கு, உனது திருவடிகளைப் பாடும்படியான சிறந்த குணத் தூய்மையைத் தந்து அருளுக.

அருணகிரி நாதர் என்னும் புலவன் பாடிய திருப்புகழ் மாலையைப் பலமுடன் ஓத மகிழ்பவனே, அவமானத்தால் உயிர் துடித்து அமணர் கழு ஏறவும், மங்கயர்க்கரசியின் கணவனான கூன் பாண்டியன் மீண்டும் சைவ சமயத்துக்கு வரவும், ஒப்பற்ற தேவாரப் பாக்களைத் தமிழில் பாடிய சம்பந்தராகிய புலவனே, ஆணவத்துடன் போருக்கு வந்த அசுரர்கள் குலத்தை அடியோடு அழியும்படி செய்த வேலைக் கையில் ஏந்தியவனே, அழகு விளங்கும் தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே, காமுகனாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட குண சீலம் தந்து அருள வேண்டுகின்றேன்.

விளக்கக் குறிப்புகள்

1.ஒருத்தி கணவனும் மீள......புலவோனே....
பாண்டியனுக்கு உற்ற சுரத்தின் வெப்பத்தால் அவன் அருகில் இருந்த சமணர்களின் மயிற்பீலி, குண்டிகை நீர், அசோகந்தளிர் யாவும் வெந்து போயின என்பர்.
பீலி வெந்துய ராவி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கோண்டிட வாது கொண்டரு  ளெழுதேடு                 ...திருப்புகழ், மூலமந்திர
திகுதிகென மண்டவிட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது)        ...திருப்புகழ்,  நிகனமெனி.

2. உணக் கை இடு - உண்ண வேண்டிக் கையை நீட்டுகின்ற.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published