F

படிப்போர்

Monday 8 October 2012

127.கவடுற்ற

உனது திருவடியின் உயர்வை அறிந்து உய்ய வேண்டும்
        
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
      கடவுட்ப்ர திஷ்டைபற்                            பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவார்க்கக மிட்டிடர்க்
      கருவிற்பு கப்பகுத்                           துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
      கசரப்ப ளிக்கெனப்                            பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்
      சரணப்ர சித்திசற்                                  றுணராரோ
குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
      குமுறக்க லக்கிவிக்                                    ரமசூரன்
குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
      துதிரத்தி னிற்குளித்                           தெழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
      றுவலைச்சி மிழ்த்துநிற்                       பவள்நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
      சுருதித் தமிழ்க்கவிப்                            பெருமாளே.
127 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

கவடு உற்ற சித்தர் சட் சமய ப்ரமத்தர் நல்
கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக
கவடு உற்ற = வஞ்சகம் கொண்ட சித்தர் = சித்தர்களும் சட் சமய ப்ரமத்தர் = ஆறு சமயங்களில் மயங்குவர்களும் (ப்ரமத்து - மயங்கி) நல் = சிறந்த கடவுள் ப்ரதிஷ்டை = கடவுளர்களின் திருவுருவை நிலை பெறுத்துகை என்று. பற்பலவாக = பலப்பல வகையாக.

கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர்
கருவில் புக பகுத்து உழல்வானேன்
கருதி = யோசித்து பெயர் குறித்து = பெயர்களைக் குறிப்பிட்டு உரு வர்க்கம் இட்டு = உருவ அமைப்பு ஏற்படுத்தி இடர் = துன்பத்துக் காரணமான கருவில் புக = உட்பொருளில் புகுதற்கு வேண்டிய பகுத்து = திட்டத்தைச் செய்து. உழல்வானேன் = ஏன் அலைய வேண்டும்?

சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க
சரப்பளிக்கு(ம்) என பொருள் தேடி
சவடிக்கு = பொன் சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணி வகைக்கும் இலச்சினைக்கு = முத்திரை மோதிரத்துக்கும் இரு கை சரிக்கும் = இரண்டு கைகளிலும் அணியப்படும் வளையல் வகைக்கும் மிக்க = மேலான சரப்பளிக்கும் = வயிரம் பொதித்த கழுத்தணி வகைக்கும் என பொருள் தேடி = (பொது மகளிருக்குக் கொடுக்க வேண்டிய) பொருளைத் தேடி.

சகலத்தும் ஒற்றை பட்டு அயல் பட்டு நிற்கு நின்
சரண ப்ரசித்தி சற்று உணராரோ
சகலத்தும் = எல்லாவற்றிலும் ஒற்றைப் பட்டு = ஒன்று பட்டும் (வேறுபாடின்றி வியாபித்தும்) அயல் பட்டு நிற்கும் = (அவைகளில் கலவாது புறம்பாய்) வேறாக நிற்கும் நின் சரண = உனது திருவடியின் ப்ரசித்தி = கீர்த்தியை சற்று உணராரோ = சற்றேனும் உணர மாட்டார்களா?

குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை
குமுற கலக்கி விக்ரம சூரன்
குவடு எட்டும் அட்டு = எட்டு மலைகளையும் வருத்தி. நெட்டு வரிக் கணத்தினை = பெரிய கடல் கூட்டங்களை. குமுறக் கலக்கி = ஒலி செய்யக் கலக்கி விக்ரம சூரன் = வலிமை வாய்ந்த சூரனுடைய.

குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி
உதிரத்தினில் குளித்து எழும் வேலா

குடலைப் புயத்தில் இட்டு = குடலைத் தனது புயத்தில் மாலையாக அணிந்து உடலைத் தறித்து = உடலைத் துண்டாக்கி உருத்தி = கோபித்து உதிரத்தினில் குளித்து = அவனுடைய இரத்தத்தில் குளித்து எழும் வேலா = எழுந்த வேலாயுதத்தை உடையவனே.

சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில்
துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண

சுவடு உற்ற = (வள்ளி, முருகன் ஆகிய இருவரின்) பாதச் சுவடுகள் உள்ள அற்புத = அழகான கவலைப் புனத்தினில் = செந்தினைப் புனத்தில் துவலைச் சிமிழ்த்து = உதிர்ந்த பூக்களை மாலையாகக் கட்டி. நிற்பவள் = நின்ற வள்ளி அம்மை நாண = நாணம் கொள்ளும்படி.

தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி
சுருதி தமிழ் கவி பெருமாளே.

தொழுது எத்து = தொழுது ஏத்தி நின்ற. முத்த = முத்தனே. பொன் = அழகிய. புரிசை செரு = மதில் சூழ்ந்த. தணி = திருத்தணிகைப் பெருமாளே. சுருதித் தமிழ்க் கவி = (சம்பந்தராக வந்துத்) தமிழ் வேதமாகிய தேவாரப் பாக்களைப் பாடிய. பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை
வஞ்சகம் கொண்ட சித்தர்களும், ஆறு சமயங்களை மேற் கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளர்களைப் ப்ரதிஷ்டை செய்து, பல பெயர்களைக் கொடுத்து, உருவ அமைப்பை ஏற்படுத்தித் துன்பத்துக்கு ஆளாகி ஏன் அலைய வேண்டும்? விலை மகளிர்க்குக் கொடுக்கும் பொருட்டுப் பொருள் தேடும் மக்கள், மெய்ப்பொருள் எல்லாவற்றிலும் ஒன்று பட்டும், அவைகளுக்குப் புறம்பாகியும் நிற்கும் உனது திருவடியின் புகழைச் சற்றேனும் உணர மாட்டார்களா?

எட்டு மலைகளையும் கடலையும் வருத்திய வலிமை வாய்ந்த சூரனுடைய உடலை அழித்து, அவனுடைய இரத்தத்தில் குளித்த வேலனே, அழகிய
செந்தினைப் புனத்தில் உதிர்ந்த பூக்களை மலையாகத் தொடுத்து நின்ற வள்ளி அம்மை நாணும்படி அவளைத் தொழுது நின்ற பெருமாளே, திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே, மக்கள் உன் சரணப் புகழை உணர மாட்டார்களோ?

விளக்கக் குறிப்புகள்

1.    கவடுற்ற சித்தர் சட் சமய.....
இந்தத் திருப்புகழ் வஞ்சக சித்தர்களையும், ஆடம்பர பூசை செய்பவர்களையும் கண்டிக்கின்றது.
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து    மடலாலும்
ஆறார் தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமா றெரி தாமிந் தனத்து மருளாதே..                           ---                திருப்புகழ், ஆராதனராடம்
2. சுருதித் தமிழ்க்கவி......
தமிழ் வேதமாகிய தேவாரத்தைக் குறிக்கும். முருகன் ஞானசம்பந்தராக அவதரித்துத் தேவாரப் பாக்ளைப் பாடினார் என்பது அருணகிரி நாதர் கருத்து.

3. சட் சமயம்-  புறப்புற சமயங்கள் 6, புறச் சமயங்கள் 6, அகப்புறச் சமயங்கள் 6, அகச்சமயங்கள் 6  ( இவ்வாறு, அவ்வாறு)

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published