F

படிப்போர்

Tuesday 11 September 2012

59. அவனிதனிலே

அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
        அழகுபெற வேநடந்து                 இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
        அதிவிதம தாய்வ ளர்ந்து                      பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
        திருவடிக ளேநி னைந்து                        துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
        திரியுமடி யேனை யுன்ற                        னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதிய றுகு வேணி தும்பை
        மணிமுடியின் மீத ணிந்த                        மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
        மலைமகள்கு மார துங்க                        வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
        படியதிர வேந டந்த                                 கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
        பழநிமலை மேல மர்ந்த                      பெருமாளே
-      பழநி

பதம் பிரித்து உரை

அவனி தனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து இளைஞோனாய்

அவனி தனிலே பிறந்து = பூமியில் பிறந்து  மதலை எனவே தவழ்ந்து = குழந்தையாகத் தவழ்ந்து  அழகு பெறவே நடந்து = அழகு பெறும் வகையில் நடை பழகி  இளைஞோனாய் = இளைஞனாய்.

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து பதினாறாய்

அரு மழலையே மிகுந்த இனிமையான (எழுத்துக்கள் நிரம்பாத) மழலைச் சொல்லே மிகுந்துள்ள  குதலை = கேட்பதற்கு இனிய மொழியே புகன்று = மழலை மொழிகளையே பேசி  அதி விதமாய் வளர்ந்து= (பெற்றோர்களால்) பல விதங்களாக வளர்க்கப்பட்டு பதினாறாய் = (வயதும்) பதினாறு ஆக.

சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்

சிவ கலைகள் = சைவ சித்தாந்த நூல்கள் ஆகமங்கள் =  சிவாகமங்கள்  மறை = வேதங்கள் ( இவைகளை) ஓதும் அன்பர் = நன்கு கற்றுணர்ந்த மெய்யன்பர்களுடைய  திருவடிகளே நினைந்து = திருவடிகளையே நினைந்து  துதியாமல் = போற்றாமல்.

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று
திரியும் அடியேனை உன்றன் அடி சேராய்

தெரிவையர்கள் = பெண்கள் மீது  ஆசை மிஞ்சி = ஆசை மிகுந்து வெகு கவலையாய் உழன்று = மிக்க கவலையுடன் அலைந்து திரிகின்ற அடியேனை = அடியவனாகிய என்னை  உன்றன் அடி சேராய் = திருவடிகளில் சேர்த்து அருளுக.

மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீது அணிந்த மக தேவர்

மவுன உபதேச சம்பு= (வேதாகமங்களின் முடிவாகிய அத்துவித உண்மை) உபதேசத்தை வாய் திறந்து கூறாமல் மவுனமாகவே இருந்து (சனகாதி நால்வருக்கு) அருளிய சம்பு மதி = சந்திரன் அறுகு = அறுகம் புல். வேணி = கங்கை. தும்பை = தும்பை மலர் (இவற்றை) மணி முடியின் மீது அணிந்த மகதேவர் = அழகிய முடியின் மேல் அணிந்துள்ள மகா தேவர்.

மன மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த
மலைமகள் குமார துங்க வடிவேலா

மனம் மகிழவே = மனம் மகிழும்படியாக  அணைந்து = அவரை அணைந்து  ஒரு புறமாக வந்த = அவரது ஒரு புறத்தில் இடம் கொண்டுள்ள  மலைமகள் = மலை மகளாகிய பார்வதியின்  குமார = மகனே  துங்க = பரிசுத்தமான  வடி வேலா = கூர்மை யான வேலனே.

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழந்து
படி அதிரவே நடந்த கழல் வீரா

பவனி வரவே உகந்து = திருவுலா வர விரும்பி  மயிலின் மிசையே திகழ்ந்து = மயிலின் மேல் ஏறி விளங்கி  படி அதிரவே நடந்த = பூமி அதிரும்படி நடந்த  கழல் வீரா = கழல் வீரனே.

பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து
பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே.

பரம பதமே = மேலான நிலையில் செறிந்த = பொருந்தி  விளங்கும்  முருகன் எனவே உகந்து = முருகன் என விரும்பி  பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே = பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

பூமியில் குழந்தையாகப் பிறந்து, தவழ்ந்து, அழுகு பெற நடந்து, மழலை மொழிகளைப் பேசி, பல விதங்களால் பெற்றோர்களால் வளர்ந்து, பதினாறு வயதான பின் சிவ கலைகள், ஆகமங்கள், வேதங்கள் இவைகளை ஓதும் அடியார்கள் திருவடியை நினைந்துத் துதியாமல், விலை மாதர்கள் ஆசை மிகுந்து, கவலை உற்று திரியும் என்னை உனது திருவடியில் சேர்ப்பாயாக.
மவுன உபதேசம் செய்த சம்பு, மதி, அறுகு, வேணி, தும்பை ஆகியவற்தை தலையில் அணியும் மகா தேவர் ஒரு பாகத்தில் உறையும் உமையின் மகனே, திருவுலா செய்ய விரும்பி மயில் மீது ஏறி வரும் வீரனே, மேலான நிலையில் பொருந்தி முருகன் என விளங்கி பழனி மலையில் மேல் அமர்ந்த பெருமாளே, அடியேனை உன்னுடைய திருவடியில் சேராய்.

விளக்கக் குறிப்புகள்
அ. சிவ கலைகள் ஆகமங்கள்......
சிவ கலைகள் -- 14 நூல்கள். ஆன்மாக்களுடன் அநாதியாயிருந்து, பதியை அடைய
ஒட்டாது மறைத்து, தன்னையும் காட்டாது பிறவற்றையும் அறிய ஒட்டாமல் செய்யும்
ஆணவ மலத்தினின்று நீங்கி, சிவத்தை அடையும் செந் நெறியை உணர்த்தி, உயிர்க்கு
உறுதியை நல்கும் 14 நூல்கள். அவையாவன –  
திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், திருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா,  போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கல்பநிராகரணம்.
இந்த நூல்களையே மெய்கண்ட சாத்திரம் என்பர்.

ஆகமங்கள் 28 வகையானவை. இவை சாரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு  பாதங்களை உடையவை. இவைகளைப் பற்றி பின்னால் கண்போம்.
வேதம் பொது நூல். ஆகமம் சிறப்பு நூல்.
ஆ. தெரிவையர்கள் ஆசை மிஞவசி.....
தெரிவையர் -  25 முதல் 32 வயதுக்குட்பட்ட பெண்கள்.

” tag:

1 comment:

  1. இது போன்ற பதிவுகள் செய்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Your comments needs approval before being published